Google Pixel 6 சீரிஸ் போனில் இனி அந்த வசதி கிடையாது! ஆனால் இந்த அம்சம் இருக்கிறதாம்!
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தைவான், ஜப்பான், அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்டம் உள்ளிட்ட நாடுகளில் கடந்த மாதம் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 சீரிஸை கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போனில் கூகுள் ஃபிட் ஆப், மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 டிவைஸில் ஹார்ட் ரேட் ட்ராக்கிங் மற்றும் ரெஸ்பிரேட்டரி ரேட் ட்ராகிங் அதாவது சுவாச வீதம் கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களை சேர்த்துள்ளது.
மேலும், பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் அதிகளவு பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது புதிய பிளாக்ஷிப் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இல்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ பக்கத்தில், பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் சார்ஜர் வழங்கப்படுவதில்லை. எனினும், கூகுள் 30 வாட் பாஸ்ட் சார்ஜரை தனியாக விற்பனை செய்து வருகிறது.
இதனால் பலரும் புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதாக நினைத்துக் கொண்டனர். தற்போது கூகுள் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், புதிய பிக்சல் 6 மாடலில் 21 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 23 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
மேலும், பேட்டரி செல், சிஸ்டம் டிசைன், டெம்பரேச்சர், சிஸ்டம் யூசேஜ் மற்றும் ஸ்டேட் ஆப் சார்ஜ் உள்ளிட்ட காரணிகளே சார்ஜிங் ரேட்டை முடிவு செய்கிறது.
போனின் பேட்டரி குறையும் போது 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.