இனி கூகுள் பே செயலிலேயே இதை செய்யலாமா? கிரெடிட் கார்டு பயனாளர்களுக்காக புதிய அம்சம்!
இன்றைய நவீன உலகில் ஆன்லைன் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதிலும், சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை வாசலில் க்யூ ஆர் கோட் வைத்து பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கூகுள் பே டெபிட் கார்டுகளை மட்டுமே ஆதரித்து வந்த நிலையில் தற்போது கிரெடிட் கார்டுகளை ஆதரவு செய்து வருகிறது. அதிலும், கூகுள் பே-யை பயன்படுத்தி ஆதரிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் இனி பரிவர்த்தனை செய்யும் போது யுபிஐ மூலமாகவே பிஷிக்கல் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
தங்கள் வங்கி கணக்கின் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிரெடிட் தொகை வரையறுக்கப்படும். மேலும், கூகுள் பே-ல் கிரெடிட் கார்டு ஆதரவு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இந்த அம்சம் அடுத்த சில நாட்களில் ஐஓஎஸ் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சில பயனர்கள் புதுப்பிப்பை பெற்றிருந்தாலும் கூட கூகுள் பே பயன்பாட்டில் கிரெட்டி கார்டை சேர்க்க இயலவில்லை என தெரிவிக்கின்றனர்.
முதலில் தங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் பே-ன் சமீபத்திய பதிப்பை பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று கூகுள் பே தளத்தை செக் செய்து கொள்ளலாம்.
இதில் தங்கள் சுயவிவரப் படத்தை கிளிக் செய்து கட்டண முறைகள் என்ற தேர்வுக்குள் செல்ல வேண்டும். வங்கி கணக்கை இணைக்க என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். கிரெடிட் கார்டை இணைக்க கூகுள் பே கணக்கில் பயன்படுத்தும் அதே தொலைபேசி எண்ணை இதில் பயன்படுத்த வேண்டும்.
முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்ட்கள் விசா மற்றும் மாஸ்டர் கார்ட்களாகவே வழங்கப்படுகிறது என்பதால் இது கூகுள் பே-ல் ஆதரிக்கப்படுகின்றன. இதனால், கூகுள் பே தற்போது ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்ட்கள், எஸ்பிஐ கிரெடிட் கார்ட்கள், கோடக் வங்கி கிரெடிட் கார்ட்கள், எசிடிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட்கள், இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்ட்கள், ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்ட்கள், ஆர்பிஎல் வங்கி கிரெடிட் கார்ட்கள் மற்றும் எஸ்பிஐ வங்கி கிரெட்டி கார்ட்கள் உடன் ஆதரிக்கப்படுகிறது.
இதன்மூலம், கிரெடிட் கார்ட்களை பயன்படுத்தி அனைத்து கட்டணங்களை செலுத்தலாம். இதற்கு கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்த கூகுள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக தகவல்கள் ஏதும் இல்லை.