குப்பை பொறுக்கிய மூதாட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! வாலிபரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்
குப்பை அள்ளி அதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வந்த 75 வயது மூதாட்டியின் வாழ்வை, ஒரே நாளில் தலைகீழாக மாற்றிய வாலிபரின் செயல் இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் 75 வயதாகும் மூதாட்டி ஒருவர் குப்பை கிடங்குகளிலிருக்கும் துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்து அதனை விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இதனை பார்த்த சிலர் தள்ளாடும் வயதில் இருக்கும் மூதாட்டியின் நிலையைக் கண்டு சில உதவிகளை செய்து வருகிறார்கள்.
வாலிபரின் செயல்
இந்நிலையில் தருண் மிஸ்ரா எனும் வாலிபர் மூதாட்டின் நிலையை பார்த்து, அவருக்கு தேவையான பொருட்கள், சேலைகள் வாங்கிக் கொடுத்ததோடு, தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
வாலிபரின் இந்த செயலுக்கு இணையத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Humanity.??? pic.twitter.com/NUZTGEB6Cp
— Awanish Sharan (@AwanishSharan) October 18, 2022