உடலில் பல நோய்களுக்கு மருந்தாகும் கம்பு தயிர் சாதம்! காரசாரமான சுவையில் எப்படி செய்யலாம்?
கம்பு சாதம் ஒரு ஆரோக்கியமான உணவாகும். முற்காலத்தில் இருந்த நமது முன்னோர்கள் இந்த உணவுகை போல பல உணவுகளை சாப்பிட்டு தான் இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
இது பலரம் அறியாத ஒரு வித்தியாசமான உணவாகும். கிராமத்து மறையில் செய்யப்படுவது. 100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.
கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் உடலுக்கு இதமாக இருக்க கம்பு சாதத்தில் மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட இன்னும் இன்னும் சாப்பிட தோன்றும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு – ஒரு கப்
- பால் – ஒன்றரை கப்
- தயிர் – அரை கப்
- கேரட் – 1 (துருவியது)
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- வர மிளகாய் – 2
- இஞ்சி – ஒரு துண்டு (துருவியது)
- மாங்காய் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
- பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மல்லித்தழை – சிறிது
செய்யும் முறை
முதலில் கம்பு-வை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்த கம்பை காய்ந்த மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்துக்கு உடைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவேண்டும். இது 4 முதல் 5 விசில் விட்டு, இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவேண்டும்.
பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அத்துடன் கறிவேப்பிலை, வர மிளகாய், பொடித்த பச்சை மிளகாய், துருவிய இஞ்சி என்பவற்றை சேர்த்து வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவேண்டும் இறுதியில், உப்பு, பொடியாக நறுக்கிய மாங்காய், துருவிய கேரட், தயிர், தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
தயிர் சாதம் இப்போது குழைவாகத்தான் இருக்கவேண்டும். எனவே நன்றாக கிளறிக்கொள்ளவேண்டும். பின்னர் இதன் மேலால் கொத்தமல்லித்தழை தூவினால் சுவையான கம்பு தயிர் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |