போதும் ஆளவிடுங்க.. சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுகிறாரா மீனா?
சிறகடிக்க ஆசை சீரியல் நாயகியாக நடித்து வரும் கோமதி பிரியா சீரியலில் இருந்து விலக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பியில் முதல் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக கொண்டு நகர்த்தப்படும் இந்த சீரியலில், ரோகிணி எப்போது மாட்டுவார் என பலரும் எதிர்ப் பார்த்து வருகிறார்கள். இதுவே சிறகடிக்க ஆசை சீரியலின் கருவாக பார்க்கப்படுகிறது.
சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மதுரையை சார்ந்த கோமதி பிரியாவிற்கு இந்த சீரியல் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்துள்ளது. விஜய் டிவியில் பாவம் கணேசன் உட்பட சில சீரியல்களில் கோமதி பிரியா நடித்திருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் சிறகடிக்க ஆசை சீரியல் தேடி தந்துள்ளது.
தற்போது பல குடும்பங்களில் கோமதி பிரியாவை அவர்கள் வீட்டு மீனாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியலில் இருந்து விலகுகிறாரா?
சீரியலில் இவ்வளவு ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா, மீனா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் யூடியூப்பில் வீடியோ வெளியாகியுள்ளது.
இதனை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் கோமதி பிரியா நன்றாக தானே நடித்து வந்தார், அவர் ஏன் விலகினார் என கேள்வி எழுப்பி வந்தனர். கடந்த சில நாட்களாக கோமதி பிரியாவுக்கு திருமணம் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது.
பழனியப்பன் விளக்கம்
இந்த நிலையில், கோமதி பிரியா சிறகடிக்க ஆசை சீரியலை விட்டு விலக உள்ளதாக பதிவிடப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய்யான தகவல். கோமதி பிரியா இன்னும் இந்த சீரியலில் தான் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்தாலும் அதில் முத்துவாக வெற்றியும், மீனாவாக கோமதி பிரியாவும் தான் நடிக்கார்கள் என திட்டவட்டமாக கூறி உள்ளார்.
இந்த செய்தி அறிந்த பின்னரே ரசிகர்கள் சந்தோஷமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |