கழுத்தில் கிலோ கணக்கில் நகைகளுடன் சுற்றித்திரிந்த நபர் தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்
அகமதாபாத்தின் நடமாடும் நகைக்கடை மனிதர் என புகழப்பட்ட குஞ்சால் பட்டேல் திடீரென தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ஹரி நாடார் போன்று அகமதாபாத்தின் குஞ்சால் பட்டேல் நடமாடும் நகைக்கடை மனிதராக வலம் வந்தார்.
கழுத்து, கைகளில் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு வந்ததால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் திடீரென குஞ்சால் பட்டேல் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனடியாக விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், குஞ்சால் பட்டேலுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது தெரியவந்தது.
இதனால் சோகத்தில் இருந்த குஞ்சால் பட்டேல் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் தற்கொலை கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.