டென்னிஸ் பந்துகளை வாயில் வைத்து உலக சாதனை படைத்த நாய்! குவியும் வாழ்த்துக்கள்
கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் தனது வாயில் 6 டென்னிஸ் பந்துகள் வைத்து உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பின்னிபாய்மோலி என்பவர் இந்த கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்த்து வருவதுடன் அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் நாய் கின்னஸ் சாதனை புத்தகத்துடனும் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அந்த பதிவில் இந்த செய்தி பெரிய செய்திதான். இது நிச்சயமாக எளிதானது அல்ல.

இந்த சாதனை மிகப்பெரியது. நானே இந்த சாதனையை படைத்தது போல உணர்கிறேன். என்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் கின்னஸ் நிறுவனத்திற்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த அனைவரும் அவருக்கும், அவரின் செல்ல நாய்க்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சாதிக்க வேண்டும் என்பது மனிதனுக்கு மட்டும் இல்லை.. இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கின்றாது என்பதை இந்த நாயின் செயல் நிருபித்திருக்கின்றது.
