காகித வடிவ தங்கப்பத்திரம் முதலீடு தொடக்கம்! வாங்க சரியான நேரம் இதுதான்
Sovereign Gold Bond Scheme... தங்க பத்திரத்தின் (Gold bond) எட்டாம் கட்ட விற்பனை நாளை 29-ம் திகதியில் தொடங்குகிறது. இதனை மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது.
தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், பங்குச் சந்தைகள், தபால் அலுவலகங்கள் மூலம் தங்கப் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம். இதனால், தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பு உயருமாம்.
ஆண்டுக்கு மட்டுமே 2.5% வட்டி வருமானமும் கிடைக்கிறது. 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தங்கப் பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்பது இத்திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி.
உண்மையாக சொல்லப்போனால், நிஜத் தங்கத்தை வாங்காமலேயே தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பெற விரும்புவோர் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.