தங்கத்தை அணியக்கூடாத ராசிகள் யார் தெரியுமா? அசுப பலனை ஏற்படுத்தும் ஜாக்கிரதை
உலோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், வெள்ளி சந்திரனுக்கும், தங்கம் வியாழன் கிரகத்திற்கும் தொடர்புடையதாம்.
இன்று தங்கத்தினை ஆடம்பரத்திற்கு அனைவரும் அணிய ஆரம்பித்துள்ள நிலையில், இவ்வாறு அணிவது அசுப பலன்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
அதாவது தங்கம் அனைவருக்கும் உதந்தது இல்லையாம். இதை அணிவதால் பண நெருக்கடி ஏற்படுவதுடன், அசுபபலன்களை சில ராசிகள் சந்திக்க வேண்டுமாம். ஆனால் சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றது.
தங்கத்தை எந்த ராசி அணியலாம்?
தங்கத்தினை மேஷம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் ஜாதகத்தில் வியாழன் சாதகமாகும் என்று கூறப்படுகின்றது.
எந்த ராசியினர் அணியக்கூடாது?
ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடல் எடை அதிமாக இருப்பவர்கள் தங்கத்தை அணிந்தால் பிரச்சினை ஏற்படுமாம்!
மோதிரத்தை தொலைக்கக்கூடாது ஏன்?
தங்க மோதிரத்தை இழப்பது அசுபத்தின் அடையாளமாகக் கருதப்படுவதால், அதில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருப்பவர்கள், தங்கம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் ரத்தின கற்களை அணிந்திருந்தால், அதை தங்க உலோகத்தில் பதித்து அணியலாம்.