பிளாட்டினம் vs தங்கம் எது முதலீட்டுக்கு சிறந்தது? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நாம் முதலீடு செய்யும் போது எப்போதும் அதிக லாபம் கிடைக்கும் வழிகளை தான் தோர்வு செய்வோம். காரணம் பணத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் அனைவருக்குமே முதலீடு செய்கின்றோம்.
முன்னைய காலங்களில் தங்கத்தை விடவும் விலை உயர்ந்த உலோகமாக பிளாட்டினம் காணப்பட்டது. இது தங்கத்தை விட அரிதான உலோகம் என்பதால் ஒரு காலகட்டத்தில் சாதாரண மக்களால் வாங்கவே முடியாத பட்டியலில் பிளாட்டினம் இடம்பிடித்திருந்தது.
ஆனால் பிளாட்டினம் குறித்து தற்காலத்தில் ஏன் அதிக கேள்வி இல்லை? என்பது குறித்து சிந்தித்திருக்கின்றீர்களா? இன்னுமே பெரும்பாலானவர்கள் தங்கத்தை விட பிளாட்டினம் தான் விலை உயர்ந்தது என நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
உண்மை அது அல்ல. தற்காலத்தில் பிளாட்டினம் தங்கத்தை விட விலை குறைவு தான் அதற்கான காரணம் தொடர்பான தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எது முதலீட்டுக்கு சிறந்தது?
தங்கத்தின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில், பிளாட்டினம் அதே விலையில் அப்படியே நிலையாக இருந்து வருகிறது.
பிளாட்டினம் ஏன் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை?, அது வாங்குவதற்கு தகுதியான உலோகம் இல்லையா? என்ற கேள்வி இப்போது வந்திருக்கும். தங்கத்தை விடவும் பிளாட்டினம் தான் விலை அதிகம் என்ற ஒரு நிலை முன்னர் காணப்படட போதிலும் தற்போது தங்கம் மற்றும் வெள்ளியில் தான் மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றார்கள்.
அதற்கு முக்கிய காரணம் மறு விற்பனை என்று வரும்போது எல்லா நகை கடைக்காரர்களும் பிளாட்டினம் நகைகளை வாங்குவதில்லை. அதுமட்டுமன்றி தங்கத்துடன் ஒப்பிடுகையில் குறைவான டிசைன்களே காணப்படுகின்றது.
அதுவே தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாரம்பரிய நகைகளாக இருந்தால் உடனடியாக அவற்றை நீங்கள் மறு விற்பனை செய்யலாம். பிளாட்டினத்தை மக்கள் தேர்ந்தெடுக்காததற்கு அது முக்கிய காரணமாக இருக்கின்றது.
தொழில் துறையில் தங்கத்தை விட பிளாட்டினதிற்கான தேவை அதிகமாக காணப்படுகின்றது. மேலும் இது தங்கத்தை விட அளவில் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதுமட்டுன்றி அலர்ஜி ரியாக்ஷனை ஏற்படுத்தாத உலோகங்களில் பிளாட்டினம் முக்கிய இடம்பிடிக்கின்றது.
தங்க நகையே சருமத்திற்கு செட் ஆகாது என்பவர்கள் பிளாட்டினத்தை தெரிவுசெய்வார்கள். நீங்கள் பிளாட்டினத்தில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா ? என கேட்டால் நீண்ட கால முதலீடு என்றால் பிளாட்டிளத்தை தேர்தெடுக்கலாம்.
அதுவே குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட வேண்டும் என நினைத்தால் தற்காலத்தை பொருத்த வரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதே சிறப்பு. ஆனால் எதிர்காலத்தில் பிளாட்டினத்தின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
