திடீரென சரிந்த தங்கம் விலை - இன்றே வாங்க சரியான நேரம்! மிஸ் பண்ணிடாதீங்க....
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்ட நிலையில், கடந்த சில நாளில் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். அதிலும், அக்டோபர் மாதம் தொடங்கியதும் விலையேற்றமும் அதிகமாக இருந்தது.
இதனிடையே, இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இன்று (அக்டோபர் 11) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,419 ஆகக் குறைந்துள்ளது.
மேலும், நேற்று இதன் விலை 4,438 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 35,504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 152 ரூபாய் குறைந்து 35,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலையும் குறைந்து, நேற்று 4,802 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,783 ரூபாயாக உள்ளது. அதேபோல, நேற்று 38,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 152 ரூபாய் குறைந்து 38,264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.90 ஆக இருந்தது. இன்று அது ரூ.65.80 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.