உண்மையில் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்திற்கு காரணம் என்ன? இனி எப்படி பார்த்து வாங்கவேண்டும்...
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், இதற்கான காரணம் தான் என்ன என பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.
அதனடிப்படையில், பார்த்தால் சர்வதேச அளவில் நிலவி வரும் மேக்ரோ பொருளாதார நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.
பணவீக்கம்
இவை, பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதம் அதிகரிப்பு, பணப்புழக்கம் சரிவு, அரசியல் பதற்றங்கள் என பல காரணிகளும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலையானது 2071 டாலர்களை உடைத்தது.
இதனால், பல வருடங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கமானது உச்சம் தொட்டது. இதற்கிடையில் பங்கு சந்தை மற்ற ரிஸ்கான முதலீடுகளில் இருந்து வெளியேறியது சரிவினை கண்டன.

அதிகரிக்குமா?
தங்கம் விலையானது முக்கியமாக இரண்டு காரணிகளினால் இயக்கப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை 1750 டாலர்கள் என்ற முறையில் காணப்படுகின்றது.
தங்கம் விலையானது குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆகவே தங்கம் விலை குறைந்த விலைக்கு கிடைக்கும்போது வாங்கி வைக்கலாம்.

இதேபோன்று, வெள்ளி விலையும் 0.56% குறைந்து, 18.957 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தை பொறுத்தவரையில், தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு 137 ரூபாய் குறைந்து 51,342 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு 345 ரூபாய் குறைந்து, 55,151 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்றைய விலை
எனவே, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4815 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 38,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், ஆபரண வெள்ளி விலை தற்போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 61.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 611 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 61,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.