தண்ணி காட்டும் தங்கம் விலை - சற்று சரிவு! இன்றைய விலை விபரம்;
தங்கம் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், சரிவு அவ்வப்போது ஏற்பட்டாலும், உயர்ந்து கொண்டே இருப்பது தான் அதிகம்.
அதிலும் கடந்த 2 நாட்களாகவே உயர்ந்து கொண்டே சென்றது. அதன்படி தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,850க்கும், சவரன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது.
இதனிடையில், அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது