வாரத்தின் முதல்நாளே செம்ம சரிவில் தங்கம் விலை: இன்னும் சரியுமா?
தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சரிவினை சந்தித்துள்ளது.
தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்த நிலையில், இது டிரேடர்கள் புராபிட் புக்கிங் செய்துள்ளதால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்திலிருந்து 10 கிராமுக்கு கிட்டதட்ட 2,000 ரூபாய் அதிகரித்த நிலையில், இது சர்வதேச சந்தையின் எதிரொலியாக இருந்து வருகின்றது.
சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1866.87 டாலர்களுக்கு ஆக ஏற்றம் கண்டது. எனினும் இன்று லாபத்தினை புக் செய்யும் விதமாக இருப்பதாக தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது.
அமெரிக்க டொலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. இது மேற்கொண்டு சரிவினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 25 ரூபாய் குறைந்து, 4,631 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 37,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 27 ரூபாய் குறைந்து, 5,052 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 40,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 10 கிராமுக்கு 50,520 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 70 பைசா குறைந்து, 71 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 71,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. தொடர்ச்சியாக 10 நாட்களில் இன்று தான் சற்று சரிவினைக் கண்டுள்ளது.
நீண்ட கால நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.