Today Gold Rate: தங்கத்தின் விலை ரூ. 2,360 வீழ்ச்சி.... மகிழ்ச்சியில் மக்கள்
Today Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், இன்றும் குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
இந்நிலையில், இன்று சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.11,715 ஆகவும், சவரன் ரூ.93,720 ஆகவும் இருந்து வந்தது.
தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து, 11,420 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 2,360 குறைந்து, 91,360 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று மாற்றமடைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 165.00ஆகவும், கிலோவிற்கு ரூ.1,65,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தங்கம் விலை
இலங்கையில் ஆபரணத்தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,09,456.80 அதுவே கிராமிற்கு ரூ.38,682.10 க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 2,83,647.20 க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 35,455.90க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 453.99 LKR என்றும் ஒரு அவுன்ஸ 14,120.81 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |