Today Gold Rate: மீண்டும் குறைந்து மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை
Today Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
இந்நிலையில், இன்று சவரனுக்கு 640 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.12,695 ஆகவும், சவரன் ரூ.1,01,560 ஆகவும் இருந்து வந்தது.
தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, 12,615 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 640 குறைந்து, 1,00,920 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 195.00ஆகவும், கிலோவிற்கு ரூ.1,95,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தங்கம் விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 3,33,164 அதுவே கிராமிற்கு ரூ. 41,645.50க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.3,05,368க்கும் ஒரு கிராமிற்கு ரூ.38,171 க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 535.26 LKR என்றும் ஒரு அவுன்ஸ 535.26 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |