Today Gold Rate: அதிகரித்த வேகத்தில் குறைந்த தங்கத்தின் விலை..இன்று எவ்வுளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.
இந்நிலையில், இன்று சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.14,150 ஆகவும், சவரன் ரூ.1,13,200 ஆகவும் இருந்து வந்தது.

தற்போது சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, 14,100 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து, 1,12,800 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ. 285.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,85,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் தங்கம் விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,94,880 அதுவே கிராமிற்கு ரூ.49,360க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,62,000க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 45,250க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 797.19 LKR என்றும் ஒரு அவுன்ஸ 24,795.30 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |