இல்லத்தரசிகளுக்கு செம்ம ஹாப்பி நியூஸ் - சரிந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு வெகுவாக சரிந்துள்ளது. அதன்படி ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கட்சா எண்ணெய், சமையல் எண்ணெய் ஆகிவையின் விலை உயர்ந்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 110 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 910 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் இன்று வெகுவாக குறைந்து சில்லறை வெள்ளியின் விலை கிராமுக்கு 260 காசுகள் குறைந்து 74 ரூபாய் 10 காசுகளுக்கும் கட்டி வெள்ளி கிலோ 74 ஆயிரத்து 100 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.