Today Gold Rate: மீண்டும் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை... அதிருப்தியில் நகை பிரியர்கள்
ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,220 ஆகவும் சவரன், ரூ.1,05,760 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 அதிகரித்து, 13,430 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,680 அதிகரித்து, 1,05,760 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையில் சற்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 245.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,45,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் தங்கம் விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,240 அதுவே கிராமிற்கு ரூ.45,780க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,35,760க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 41,970க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 597.39 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,580.85 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |