ஒரே நாளில் மீண்டும் சரிந்த தங்கம் விலை... இப்போதே வாங்கலாமா? இன்றைய நிலவரம்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த 16-ந்தேதியில் இருந்து அதன் விலை தொடர்ந்து சரிந்து, ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
இதனையடுத்து, நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.4,388 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,357-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் படி, சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.34,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதபோல், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.64,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.