தாறுமாறாக உயரும் தங்கம் விலை.. அமெரிக்காவில் அதிகமாகும் வேலைவாய்ப்பு!
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் உலகில் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நம்புகிறார்கள். இதனால் உலக நாடுகளில் தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
வழக்கமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் பற்றிய விவரங்கள் வெளியாகும் வேளையில், தங்க விலையில் மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில், தற்போது அமெரிக்க வேலைவாய்ப்பு தொடர்பாக விவரங்கள் வெளியாகி,தங்க விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து விளக்கமாக பதிவில் பார்க்கலாம்.

தங்கம் விலை உயர்வு
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வெளியான தரவுகளின்படி, கடந்த மாதம் 42,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ADP நிறுவனம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளன.
இதன் விளைவாக தங்கம் போன்ற வட்டி வருமானம் தராத முதலீடு குறையும். ஆனால் இந்த தடவை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை அமெரிக்க ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்சுக்கு 1.3% உயர்ந்து $3,983.89 என்ற அளவில் இருந்தது. மாறாக தற்போது டிசம்பர் மாதத்திற்கான தங்க வர்த்தக விலை $3,992.90 ஆக உயர்ந்தது. அதே போன்று வெள்ளி, பிளாட்டினம், பாலடியம் போன்ற பிற மதிப்புமிக்க உலோகங்களின் விலையும் உயர்ந்துள்ளன.
இதன்படி, வெள்ளி 2.2%, பிளாட்டினம் 1.7%, பாலடியம் 2.4% வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவு
பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாகவே அதிக மதிப்பில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

வெளியான தகவல்களை வைத்து பார்க்கும் பொழுது உலக பங்குச் சந்தைகளில் சில மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மூதலீட்டாளர்கள் தங்கம் பக்கம் சென்றுள்ளனர். ஏஐ பங்குகளே இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |