தங்கம் விலையில் அதிரடி மாற்றம்... அடுத்த 6 மாதங்களுக்கு பின் பட்டையை கிளப்ப போகும் வெள்ளி
2020ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தினை தொட்ட தங்கம் விலையானது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் உச்சம் எட்டியது.
எனினும் பெரியளவில் சரிவினைக் காணவில்லை. 2020ம் ஆண்டில் காமெக்ஸ் தங்கத்தில் 25% வருமானம் கிடைத்தது.
எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கமும் அதிகரித்து காணப்படுகின்றது.

தங்கம் விலையில் அழுத்தம்
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் பத்திர சந்தை காரணமாக தங்கம் விலையானது, கடுமையானது எதிர்ப்பினை கண்டு வருகின்றது.
இது உலகம் முழுக்க பணவீக்க விகிதம் என்பது அதிகரித்து வரும் நிலையில் கூட கைகொடுத்ததாக தெரியவில்லை.
எப்படியிருப்பினும் சர்வதேச பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், தொழிற்துறையில் இந்த விலைமதிப்பற்ற உலோகங்களின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில் பல நாடுகளும் பசுமை ஆற்றலுக்கு திரும்பி வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் வெள்ளியின் தேவையை ஊக்குவிக்கலாம். இது நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

வெள்ளிக்கு ஆதரவு
சீனாவின் பொருளாதாரத்தில் நிலவி வரும் வலிமையான அறிகுறிகள், சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என அனைத்தும், தொழிற்துறை உலோகமான வெள்ளிக்கு ஆதரவாக அமையலாம்.
டிசம்பரில் சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டினை காட்டிலும் +20.9% அதிகரித்துள்ளது.
இது தவிர அமெரிக்காவின் தொழிற்துறை குறித்தான தரவும் சாதமாக வந்த நிலையில், இது வெள்ளியின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்க வழிவகுக்கலாம்.