இலங்கையில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை! தங்கத்தின் தூய்மை பற்றி முழு விபரம் இதோ
இரண்டு மாதங்களின் பின்னர் தங்கத்தின் விலை உலக சந்தையில் மீளவும் அதிகரிக்கிறது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,802 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
அதன்படி, இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலை 108,000 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், 24 கரட் தங்கத்தின் விலை 117,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

தங்கத்தின் தூய்மை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..
சந்தையில் நாம் காணும் அல்லது கொள்முதல் செய்யும் தங்கத்தில் செம்பு, நிக்கல், வெள்ளி, பல்லேடியம் மற்றும் துத்தநாகம் போன்ற வேறு சில உலோகங்கள் கலக்கப்படுகிறது.
வெள்ளி மற்றும் தாமிரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
குறைந்தபட்சம் அல்லது மலிவான தங்கம், இளஞ்சிவப்புத் தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு கலந்த தங்கம் என அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் பச்சை தங்கம் என அழைக்கப்படுகிறது.
வெள்ளைத் தங்கம் என்பது தங்கம் மற்றும் பல்லேடியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் கலந்தது. வெள்ளி தாமிரம் மற்றும் துத்தநாகத்துடன் கலந்த மஞ்சள் கலந்த தங்கம் விலை மிகுதியானது.

காரட் என்பது தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும்.
- 24 காரட் -99.9%
- 23 காரட் -95.6%
- 22 காரட் -91.6%
- 21 காரட் -87.5%
- 18 காரட் -75.0%
- 17 காரட் -70.8%
- 14 காரட் -58.5%
- 10 காரட் -41.7%
- 9 காரட் -37.5%
- 8 காரட் -33.3%
கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் காரட்கள் குறைவாக இருக்கும் தங்கம் வலு மிக்கது.
உலோகத்தை வாங்குவதற்கு முன் நாட்டில் எப்போதும் தங்க விலைகளைப் பாருங்கள்.