(19.07.2023) இன்று ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை!
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.5,590க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.320 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,590
8 கிராம் - ரூ. 44,720
10 கிராம் - ரூ. 55,900
100 கிராம் - ரூ.5,59,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.81.40க்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 0.60 பைசா உயர்ந்து 82க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.656க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.82
8 கிராம் - ரூ.656
10 கிராம் - ரூ.820
100 கிராம் - ரூ.8,200
1 கிலோ - ரூ.82,000
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |