(18.07.2023) இன்று ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை ; வெளியான பட்டியல்
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,536க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.14 உயர்ந்து ரூ.5,550க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.44,288க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.112 உயர்ந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,550
8 கிராம் - ரூ. 44,400
10 கிராம் - ரூ. 55,500
100 கிராம் - ரூ.5,55,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.81.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 0.10 பைசா குறைந்து 81.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூ.651.20க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.81.40
8 கிராம் - ரூ.651.20
10 கிராம் - ரூ.814
100 கிராம் - ரூ.8,140
1 கிலோ - ரூ.81,400