(08.05.2023) இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவுன்னு தெரியுமா?
தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ. 45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.154 உயர்ந்துள்ளது.
இன்று தங்கம் விலை நிலவரம்
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,691க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.19 உயர்ந்து ரூ.5,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,528க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.152 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,710
8 கிராம் - ரூ. 45,680
10 கிராம் - ரூ. 57,100
100 கிராம் - ரூ.5,71,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.82.40க்கு விற்பனையானது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.03 பைசா உயர்ந்து ரூ.82.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.661.60க்கு விற்பனையாகிறது.
1 கிராம் - ரூ.82.70
8 கிராம் - ரூ.661.60
10 கிராம் - ரூ.827
100 கிராம் - ரூ.8,270
1 கிலோ - ரூ.82,700