அதிர்ச்சி... இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கம் விலை... - கலக்கத்தில் மக்கள்..!
சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து தங்க விலையால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இன்றைக்கான தங்கம் விலை பட்டியலைப் பார்ப்போம்.
இன்றைய தங்கத்தின் விலை
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,450க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.5,560க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.43,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இன்று தங்கம் விலை ரூ.880 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,560
8 கிராம் - ரூ. 44,480
10 கிராம் - ரூ. 55,600
100 கிராம் - ரூ.5,56,000
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.73.10க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1.30 பைசா உயர்ந்து ரூ.74.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.74.40
8 கிராம் - ரூ.595.20
10 கிராம் - ரூ.744
100 கிராம் - ரூ.7,440
1 கிலோ - ரூ.74,400

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.