மகளிர் தினத்தில் குறைந்த தங்கம் விலை.... - மகிழ்ச்சியில் மக்கள்...!
மகளிர் தினமான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
மகளிர் தினத்தில் குறைந்த தங்கம் விலை
கடந்த மாதம் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது.
தங்கம், வைரம், வெள்ளி மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டதால், தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. இப்படி தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றால் என்ன செய்வது என்று மக்கள் கலக்கத்தில் இருந்து வந்தனர்.
ஆனால், பிப்ரவரி மாத இறுதியில் தங்கம் விலை சற்று குறைய ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. மகளிர் தினமான இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை -
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,235க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.70 குறைந்து ரூ.5,165க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.41,880க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம் -
1 கிராம் - ரூ. 5,165
8 கிராம் - ரூ. 41,320
10 கிராம் - ரூ. 51,650
100 கிராம் - ரூ.5,16,500
இன்றைய வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.70க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 2.50 ரூபாய் குறைந்து ரூ.67.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.67.50
8 கிராம் - ரூ.540
10 கிராம் - ரூ.675
100 கிராம் - ரூ.6,750
1 கிலோ - ரூ.67,500