இன்று தங்கம் விலை திடீர் சரிவு! மேலும் குறையுமா? முழுவிபரம் இதோ
தங்கம் விலையானது இரண்டாவது வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.
இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். எனினும் ஆபரண சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது.
மேஷ ராசியில் சுக்கிரன்! 25 நாட்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்: யாருக்கு பாதகம்? யாருக்கு சாதகம்?
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.38,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 குறைந்து, ரூ.4723-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 70 பைசா குறைந்து ரூ.65.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.700 குறைந்து ரூ.65,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.