என்ன செய்தாலும் இந்த ராசிக்கு தங்கம் சேரவே சேராதாம்!
லட்சுமி கடாட்சம் நிறைந்த தங்கத்தில் முதலீடு செய்யவே அனைவரும் விரும்புவார்கள்.
இதற்கு மற்றொரு காரணம் குரு பகவான், அவருக்கு பிடித்த உலோகம் என்றால் தங்கம் தான்.
ஒருவரின் ராசியில் குரு உச்சத்தில் இருந்தால் தங்கம் குவியும் என்பது நம்பிக்கை.
ஆனால் ஒரு சிலருக்கு என்ன தான் முயற்சி எடுத்தாலும் தங்கம் சேர்வது கைகூட செய்யாது.
அப்படி தங்கம் சேமித்து வைத்திருந்தாலும் பயன் அளிக்காது, ஜாதக ரீதியாக யாருக்கு தங்கம் சேராது, யாருக்கு அதிகம் குவியும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தங்கம் அதிகம் சேர்வது இவர்களுக்கு தான்
ஒருவரின் ஜாதகத்தில் குருவானவர் லக்னத்துக்கோ சந்திர ராசிக்கோ 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருந்தால் தங்கம் சேரும்.
குருவுக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் தங்கம் சேரும்.

குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்து குரு பலம் பெற்று இருந்தால் தங்கம் சேரும்.
வியாழக்கிழமை, உத்தராயண காலம் அல்லது வளர்பிறையில் பகல் வேளையில் பிறந்தவர்களுக்கு குருபலம் இருக்குமேயானால் அவருக்கு தங்கச் சேர்க்கை அதிகரிக்கும்.
தங்கம் யாருக்கு சேராமல் போகும்
குருவுக்கு எதிரியான புதனின் ராசிகளான மிதுனம், கன்னியும், சுக்கிரனின் ராசிகளான ரிஷபம், துலாம் ஆகியவை ஒருவருக்கு ராசி, லக்னமாக அமைந்து பலமில்லாமல் இருந்தால் தங்கம் சேராது.
அப்படியே அவர்கள் சேமித்து வைத்திருந்தால் பயன்படாமல் போகும், ஒருவரின் ஜாதகத்தில் குருபலம் இல்லாமல் போனாலும் தங்கம் சேராது.

எந்த ராசியினர் எப்போது தங்கம் வாங்கலாம்
மேஷ ராசி - ஞாயிறு, வெள்ளி
ரிஷபம் ராசி - புதன், வெள்ளி
மிதுன ராசி - திங்கள், வியாழன்
கடக ராசி - ஞாயிறு, திங்கள், புதன்
சிம்ம ராசி - புதன், வெள்ளி
கன்னி ராசி - சனி
துலாம் ராசி - திங்கள், வெள்ளி
விருச்சிக ராசி - சனி
தனுசு ராசி - வியாழன்
மகர ராசி - புதன், வெள்ளி
கும்ப ராசி - புதன், வெள்ளி, ஞாயிறு
மீன ராசி - வியாழன், திங்கள்
வியாழக்கிழமைதோறும் குருவுக்கு உகந்த மலர்களால் அர்ச்சித்து அவர் மனம் குளிர செய்தால், பொன்னும் பொருளும் அள்ளித்தருவார் குருபகவான்.