பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் தங்க நாணயம்! அதிரடி ஆஃபர் எங்கு தெரியுமா?
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க நாணயம் அளிப்பதாக காஷ்மீரில் வெளியான திட்டம் ஒன்று ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் குப்பை
இன்று பெரும்பாலான நபர்களின் கைகளில் கடைக்கு செல்லும் தருணத்தில் பிளாஸ்டிக் பைகளை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால் வருங்கால சந்ததி மட்டுமின்றி தற்போது இருக்கும் நபர்கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவில் உள்ள கிராமத்தில் சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆம் பிளாஸ்டிக் குப்பைக்கு பதிலாக தங்க நாணயம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிவிக்கப்பட்ட முதல் மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்க போட்டி போட்டு எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் காஷ்மீர் நகரில் அனந்த்நாக் மாவட்டத்தில் சடிவாரா என்ற கிராமத்திலேயே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளை யாராவது கொடுத்தால், பஞ்சாயத்து அவருக்கு தங்க நாணயம் வழங்கும். பிரசாரம் தொடங்கிய 15 நாட்களில் கிராமம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத கிராமமாக அறிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.