சாக்லேட்டின் விலையை விட குறைந்த விலையில் தங்கம்?
இந்தியாவில் அதிக அளவில் மக்கள் தங்க ஆபரணங்களை விரும்பி அணிந்து வருகின்றார்கள்.
இந்திய கலாச்சார பண்பாட்டு ரீதியிலும் தங்க ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தங்கத்தின் விலை கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தது என்பது குறித்த ஓர் விலை பட்டியல் இணையத்தில் உலவி வருகின்றது.
அந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது.
1950 களில் தங்கத்தின் விலை மிகவும் குறைவாக காணப்பட்டுள்ளது என்பது இந்த விலைப்பட்டியல் இன் ஊடாக தெரியவந்துள்ளது.
1951 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட தங்க ஆபரணம் ஒன்றின் விலைப்பட்டியல் இவ்வாறு வைரலாகி வருகின்றது.
தங்கம் வாங்குவது என்பது பலருக்கு கனவாகவே தற்பொழுது காணப்படுகின்றது. தங்கத்தை சொத்தாகவும் சிலர் ஓர் முதலீடாகவும் கொள்வனவு செய்வதனை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.