பல்கேரிய கடற்கரையில் முடிவில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் என்ன காரணம்?
பல்கேரிய கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கடற்கரையில் அமைந்துள்ள கல்லறையில் எலும்புக்கூடுகளுடன் பல தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்கேரிய கடற்கரை
தற்போது இந்த கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு பூமியில் மறைந்திருக்கும் பல ரகசியங்களை அறிவது கடினமாக உள்ளது.
அந்த வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது கல்லறை ஒன்றினுள் மண்ணில் புதைக்கப்பட ஒரு மனித உடலில் இருந்து தங்கமும் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் கிமு 4560 - 4450 க்கு முந்தையது. இதுவரை 290-க்கும் மேற்பட்ட கல்லறைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட தங்கத்தால் ஆன கலைப்பொருட்கள் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லறை என்று தெரியவந்துள்ளது. இதை The Archaeologist இன் அறிக்கையின்படி, ரேடியோகார்பன் டேட்டிங் தம்ரியுகாவின் கல்லறைகள் கிமு 4560-4450 க்கு முந்தையவை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிரீடங்கள், காதணிகள், கழுத்தணிகள், பெல்ட்கள், வளையல்கள் மற்றும் பல உட்பட 850 தங்கப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தங்கத்துடன் வந்த எலும்புக்கூட்டின் உயரம் 5 அடி 6-8 அங்குலம் என்று கூறப்படுகிறது. இங்கு அதிகபட்சமாக 1.5 கிலோ தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது அரசனின் கல்லறையாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான காரணம் அரசனால் மட்டும் தான் இவ்வளவு தங்கங்களை வைத்திருக்க முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.