சொர்க்க பூமியான சவூதி அரேபியா! ஒரே நாளில் அடுத்தடுத்து கண்டுப்பிடிக்கப்பட்ட தங்க குகைகள்
சவூதி அரேபியாவில் தங்கம் மற்றும் காப்பர் தாதுக்கள் இருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் மதீனா பகுதியில் உள்ள அபா அல்-ரஹா எல்லைக்குள் தங்க தாது கண்டுபிடிக்கப்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
அதேபோல, மதீனாவில் உள்ள வாடி அல்-ஃபரா பகுதியில் உள்ள அல்-மாடிக் பகுதியில் நான்கு இடங்களில் செப்பு தாது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் அடித்த ஜாக்பாட்
இந்த கண்டுபிடிப்புகளின் மூலமாக புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்திருப்பதாக சவுதி புவியியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதன்மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் எனவும் சவூதி அரசு திட்டமிட்டிருக்கிறது.
மேலும், சவூதியின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தளத்தில் $533 மில்லியன் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் சுமார் 4,000 வேலைகளை உருவாக்கும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.