பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் Gold Coin Egg Recipe எப்படி செய்வது?
உலகளவில் பெரும்பாலான மனிதர்கள் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு முட்டை, இதில் நம் உடலுக்கு தேவையான அதேசமயம் நம் உடல் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய புரதச்சத்து நிறைந்துள்ளது.
இதன் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி எலும்புகளுக்கு வலு சேர்க்கும், இதிலுள்ள லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.
இதுதவிர, ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளது.
எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
இப்படிபட்ட ஆரோக்கிய பொக்கிஷமான முட்டையை வைத்து சுவையான Gold Coin Egg Recipe செய்வது எப்படி என பார்க்கலாம்.
செய்முறை
முதலில் முட்டையை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
முட்டையை இரண்டு துண்டுகளாக்கிவிட்டு, வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
இதனை சோள மாவில் அப்படியே பிரட்டி எடுத்து பொன்னிறமாகும் வரை எண்ணெயில் வறுத்து எடுத்தால் தங்க நிறத்தில் மின்னும்.
அடுத்ததாக கடாயை அடுப்பி்ல் வைத்து இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின்னர், சில்லி ஃப்ளேக்ஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முட்டைகளை நன்கு கிளறி எடுத்தால் Gold Coin Egg தயார்!!!

எடையை குறைத்து எலும்புகளுக்கு வலிமை தரும் ராகி சிமிலி