திடீரென அதிகரித்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தாலும், ஒரு சில நாட்களில் அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று காலையில் மீண்டும் விலையேற்றம் தொடங்கியுள்ளது.
இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். சென்னையில் இன்று (செப்டம்பர் 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,355 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இதன் விலை 4,351 ரூபாயாக இருந்தது. அதேபோல், நேற்று 34,808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 31 ரூபாய் உயர்ந்து 34,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,529 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,328 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,328 ஆகவும், கேரளாவில் ரூ.4,336 ஆகவும், டெல்லியில் ரூ.4,550 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,576 ஆகவும், ஒசூரில் ரூ.4,375 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,372 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.40 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.70 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.