சரிவில் இருந்து திடீரென அதிகரித்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம் என்ன?
தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் ஓரளவுக்கு தங்கம் விலை குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,410 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 312 ரூபாய் உயர்ந்து 35,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,774 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல, நேற்று 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 312 ரூபாய் உயர்ந்து 38,192 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,534 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,368 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,368 ஆகவும், கேரளாவில் ரூ.4,357 ஆகவும், டெல்லியில் ரூ.4,566 ஆகவும்,
கொல்கத்தாவில் ரூ.4,556 ஆகவும், ஒசூரில் ரூ.4,381 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,378 ஆகவும் இருக்கிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.10 ஆக இருந்தது. இன்று அது ரூ.65.01 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.