விபத்தில் சிக்கிய மருமகன்! திருஷ்டி என்று தாய்மாமா செய்த காரியம்: வியப்பில் மருத்துவமனை
ஓசூர் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞருக்கு திருஷ்டி கழிக்க ஆட்டுக் குட்டியை அழைத்து சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மனிதர்களுக்கு திருஷ்டி கழிக்க வேண்டும் என்றால் பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய், கற்பூரம் இவற்றினைப் பயன்படுத்தியே திருஷ்டி கழிப்பதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு இளைஞர் ஒருவரின் தாய்மாமா செய்துள்ள காரியம் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
ஆட்டுக்குட்டியை வைத்து திருஷ்டி
கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரும் இவரது சகோதரியும் கடந்த சில தினங்கள் முன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கீழே தவறி விழுந்ததில் முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
முருகனுக்கு பலரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்திற்கு காரணம் என உறவினர்கள் நம்பியுள்ளதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்துள்ளனர்.
இந்நிலையில் முருகன் திருமணம் ஆகாதவர் என்பதால் அவரது குல வழக்கப்படி உறவினர் மருத்துவமனைக்கே ஆட்டுக் குட்டியை கொண்டு வந்து அவருக்கு திருஷ்டி சுத்தி பலியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மட்டும் அங்கு சுற்றியிருந்த நபர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
