தலையால் பெண்ணை தாக்கிய ஆடு! மகிழ்ச்சியில் இருந்த இளம் பெண்ணுக்கு நொடியில் நடந்த விபரீதம்
இன்றும் மக்கள் இந்த செல்ஃபி மோகத்தில் இருந்து வெளியே வந்தபாடில்லை. அந்த வகையில் இங்கு ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது, அவருக்கு நேர்ந்த ஒரு விபரீதம் தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்படுகிறது. ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது அருகில் இருந்த ஆடு கோபத்தில் அவரைத் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், ஒரு கிராமத்தில் இருக்கும் சாலை போல தோற்றமளிக்கும் இடத்திற்கு நடுவில் அந்த பெண் செல்ஃபி வீடியோ எடுப்பதைக் காணலாம்.
மேலும் அவர் நிற்கும் இடத்தில் இருந்து சிறுது தூரத்தில் ஆடு ஒன்று இருப்பதையும் காணலாம். அந்த ஆடு ஒரு நீண்ட கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. மேலும், செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு மிக அருகில் வந்தது.
ஆடு மிக அருகில் வருவதைக் கண்ட பெண் தனது முகபாவனைகளை மாற்றிக் கொண்டே வீடியோவை எடுத்துக்கொண்டிருந்தார்.அடுத்து வரும் விளைவுகளை பற்றி தெரியாமல் அந்த பெண் செல்ஃபி வீடியோவை எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ஆடு முன்னும் பின்னுமாக நகர்வதைக் காணலாம்.
திடீரென்று ஆடு இரண்டு அடி பின்னால் எடுத்து வைத்து பிறகு அந்த பெண்ணை நோக்கி வேகமாக முன்னேறி அதன் தலையால் அந்த பெண்ணை தாக்கியது. இந்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.