மனித முக அமைப்பில் பிறந்த ஆட்டுக்குட்டி! வைரலாகும் புகைப்படம்
இந்திய மாநிலம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் ஆடு ஒன்று மனித முகம் தோற்றத்தில் குட்டி ஈன்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் நடந்த வினோதம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாமராமபுரம் ஈசிஆர் மெயின் ரோடு உப்பு குளத்தான் கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி.
விவசாயம் செய்தும் ஆடுகளை வளர்த்தும் வரும் இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்த ஆடுகளில் ஒன்று குட்டிஈன்றுள்ளது.
இதில் வினோதம் என்னவெனில் குறித்த ஆடு ஈன்ற குட்டி மனித முக தோற்றத்தில் காணப்படுகின்றது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறான குறைபாடுகளுடன் பிறக்கும் விலங்குகள் அதிக நாட்கள் உயிருடன் இருப்பதில்லை... மேலும் பிறக்கும் போதே உயிரற்ற நிலையில் பிறக்கின்றது.
குறித்த ஆட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.