'கங்குவா' படத்தின் வீடியோவை வெளியிடவுள்ள ஞானவேல் ராஜா - ஏன்னு தெரியுமா?
தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கங்குவா
இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படமானது தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கின்றார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பட்டானி நடிக்கின்றார். மேலும் இதில் வில்லனாக நட்டி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சூர்யா ஒரு வலிமைமிக்க, போர்வீரனாக இருக்கின்றார்.
இந்நிலையில் இப்படத்தின் ஒரு காட்டியை வெளியிடவுள்ளதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
'கங்குவா' படத்தின் வீடியோ
மும்பையில் புதிதாக அலுவலகம் திறந்ததை கொண்டாடும் வகையில், ஞானவேல் ராஜா கங்குவா படத்தின் புதிய கிலிம்ஸை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு வெளியிடப்பட்டால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |