2025-ல் பேரழிவை ஏற்படுத்தப் போகும் வைரஸ் தொற்று- நிபுணர்களின் எச்சரிக்கை!
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நோய்த்தொற்று பரவி உயிர் சேதத்தை ஏற்படுத்தும்.
அந்த வரிசையில், கடந்த 2019ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்று உலக நாடுகளுக்கு வேகமாக பரவி, ஏகப்பட்ட மக்களை காவு வாங்கியது.
சுமாராக 2 ஆண்டுகள் அந்த நோயுடன் போராடி நோயிலிருந்து மீண்டும் வந்தோம். ஆனாலும் இந்த நோயின் பக்க விளைவுகள் இதுவரையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனை தொடர்ந்து, H5N1 வைரஸ் தொற்று பரவியது. இதனை சிலர் பறவை காய்ச்சல் என்று அழைத்தார்கள். இந்த வகை வைரஸ் பறவைகளுக்கு ஏற்படும் நோயாகும்.
இந்த வைரஸ் கால்நடைகள் மற்றும் குதிரைகள் போன்ற பிற விலங்குகளை சமீபக்காலமாக பாதித்து வந்தது. ஆனாலும் இவை மனிதர்களை பெரிதாக தாக்கவில்லை என்றாலும் இந்த நிலை மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் பிறக்கவுள்ள 2025 ஆம் ஆண்டில் உலகை உலுக்கியுள்ள வைரஸ் தொற்றுக்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நிபுணர்களின் எச்சரிக்கை
ஒவ்வொரு ஆண்டும் மலேரியா, காசநோய் மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்களால் சுமார் 2 மில்லியன் பேர் இறக்கிறார்கள். இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது.
இந்த நோய்கள் பிறக்கவுள்ள 2025 ஆம் ஆண்டிலும் தொடரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் வேகமாக உருவ மாற்றமடையும் திறன் கொண்டவை என்பதால் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக H5N1 வைரஸ் தொற்று 2025-ல் சுகாதார நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
H5N1 வைரஸ் தொற்றின் அச்சுறுத்தம்
உலகளவில் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த கோழி மற்றும் பறவைகள் மத்தியில் H5N1 வைரஸ் இருக்கும்.
அத்துடன் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களில் மாடுகளுக்கும், மங்கோலியாவில் குதிரைகளுக்கும் இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களை தாக்குவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது.
நேரடியாக பாதுகாப்பாக இருந்தாலும் இறைச்சி, பால் போன்றவற்றின் மூலம் வேகமாக பரவலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |