டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் Glimepiride மாத்திரைகள்
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரை Glimepiride.
சரியான உணவுமுறை, சீரான உடற்பயிற்சியுடன் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்ளும் போது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
கணையத்திலிருந்து வரும் இன்சுலினின் அளவை அதிகரிப்பதே இதன் வேலையாகும்.
பக்கவிளைவுகள்
ரத்த சர்க்கரை அளவு திடீரென குறைவது
தலைவலி
குமட்டல்
மயக்கம்
மருத்துவரின் பரிந்துரைப்படியே Glimepiride மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தை உண்டாக்கலாம்.
Glimepiride மாத்திரைகளால் உங்களுக்கு பக்கவிளைவுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்ட பின்னரே வாகனங்களை இயக்குதல் மற்றும் கனரக வேலைகளை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
இம்மாத்திரைகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால், இன்னும் பிற மாத்திரைகளோ, அல்லது உணவை சாப்பிடாமல் விட்டாலோ உங்களுக்கே அது ஆபத்தாய் முடியலாம்.
எப்போதும் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வகையில், சர்க்கரை நிறைந்த உணவு அல்லது பழச்சாறுகளை கையில் வைத்துக் கொள்ளவும்.
Glimepiride மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பொது கல்லீரலின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் கண்காணித்துக் கொண்டிருப்பார்.
அடிவயிற்றில் வலி, திடீரென செயலிழந்து போவது போன்ற உணவு, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
Glimepiride மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் முன்னரும், எடுத்துக்கொள்ளும் போதும் சீரான இடைவெளியில் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியம்.
மறந்தும் கூட வெறும் வயிற்றில் Glimepiride மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம், காலை உணவுடன் சேர்த்தே எடுத்துக்கொள்ளவும், மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை தாண்டி எடுக்க வேண்டாம்.
Glimepiride மாத்திரைகள் பயன்படுத்தும் போது மயக்கம் என்பது பொதுவான பக்கவிளைவே, அந்நேரங்களில் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கலாம் அல்லது படுத்திருக்கலாம்.
தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் உடல் எடை அதிகரிக்கும், கணையத்தை தூண்டி இன்சுலினை வெளிப்படுத்துவதால் பசி அதிகரிக்கும், எனவே உடல் எடையும் அதிகரிக்கும், சீரான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள், டைப் 1 நீரிழிவு நோயாளிகள் Glimepiride மாத்திரைகளை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |