கண்ணாடி கேஸ் ஸ்டவ்வில் சமைப்பவரா நீங்கள்? இந்த அதிர்ச்சி காட்சியை பாருங்க
கண்ணாடி கேஸ் அடுப்பில் சமைக்கும் போது எதிர்பாராத விதமாக இம்மாதிரியான விபத்துக்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புளதை காட்டியுள்ளது இந்த அதிர்ச்சி காட்சி.
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் கண்ணாடியில் ஆன கேஸ் அடுப்பையே பயன்படுத்தி வருகின்றனர். சுத்தம் செய்வதற்கு மிகவும் சுலபமான அடுப்பாக இருப்பதால் இல்லத்தரசிகளுக்கு பிடித்த அடுப்பாகவும் மாறியுள்ளது.
ஆனால் இதன் மூலம் பல ஆபத்துக்கள் ஏற்படும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அடுப்பு ஒன்று வெடித்து சிதறிய காட்சியே இதுவாகும்.
இங்கு பெண் ஒருவர் அடுப்பில் பெரிய கடாய் ஒன்றினை வைத்து சமைத்துக் கொண்டு, மற்றொரு புறம் சமையலுக்கு தேவையான காய்களை வெட்டி வருகின்றார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து சுக்குநூறாகியுள்ளது. அதாவது இம்மாதிரியான அடுப்பில் மிகப்பெரிய பாத்திரத்தினை வைப்பதால், கண்ணாடியில் சூடு படுகின்றது. இதனால் எளிதில் வெடித்து சிதறுகின்றது. ஆதலால் சிறிய அளவாக கடாயை வைத்து இந்த அடுப்புகளில் சமைப்பதற்கு பழகிக்கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |