உலகின் மிக கொடிய விஷப்பாம்புடன் விளையாடும் சிறுமி! ஓர் எச்சரிக்கை வீடியோ
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் 11 வயது சிறுமி ஒருவர் மிக ஆபத்தான கொடிய விஷப்பாம்புடன் வெளியாடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான Stewart Gatt என்பவரால் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது.
அதில், இந்த சிறுமி மிக அதிர்ஷ்டசாலி நல்ல வேளையாக பாம்பு அவளை எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வீடியோவை சிறுமியின் பாட்டிக்கு அனுப்பிவிட்டு, கவனமுடன் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் பற்றி பின்வருமாறு,
மெல்போர்னின் Newport என்ற இடத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்று கொண்டிருந்த போது eastern brown பாம்பை பார்த்துள்ளார்.
உடனே அதை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் விளையாடியுள்ளார், நல்லவேளையாக பாம்பு அந்த சிறுமியை கொத்தவில்லை.
ஏனெனில் உலகின் மிகவும் ஆபத்தான பாம்பு இனங்களில் இதுவும் ஒன்றாகும், அவுஸ்திரேலியாவில் அதிக பேர் உயிரிழப்புக்கு காரணமும் இந்த பாம்பே என கூறப்படுகிறது.
இந்நிலையில் Stewart Gatt, ஒருவேளை அந்த பாம்பு கொத்தியிருந்தால் சிறுமி உயிரிழந்திருக்க நேரிடலாம், தயவுசெய்து உங்களது குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் ஆபத்தான வனவிலங்குகளுடன் விளையாட வேண்டாம் என அறிவுரை கூறுங்கள், பிள்ளைகள் தவறான செயல்களில் ஈடுபடுவதை நாம் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.