இந்த தலைமுறை குழந்தைகள் இளம் வயதிலேயே பருவமடைய என்ன காரணம்? மருத்துவர் விளக்கம்
தற்போது இருக்கும் பெண் குழந்தைகள் ஒரு வயதிற்கு வர முன்னரே பருவமடைந்து விடுகிறார்கள்.
இது தொடர்பான ஆய்வுகளில் தவறான வாழ்க்கை மற்றும் முறையற்ற உணவு பழக்கங்கள் தான் இதற்கு காரணம் கூறப்படுகின்றது.
தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு குறைந்த வயதிலேயே மாதவிடாய் வந்து விடுகிறது. 100 -ல் 70 சதவீதமான பெண் பிள்ளைகள் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.
முதல் மாதவிடாய் வந்த பின்னர் இரண்டாவது சுழற்சி 2 வருடங்கள் பின்னர் வரும் பெண்களே ஆரோக்கியமானவர்கள் என கூறப்படுகின்றது. ஆனால் சிலர் 3,4 வருடங்கள் மறு சுழற்சிக்காக காத்திருக்கிறார்கள். இது ஒரு சீரான நிலை அல்ல என ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வகையில் தற்போது இருக்கும் பெண்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட வயதை அடைய முன்னர் பருவமடைகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிறுவயதில் பருவமடைய என்ன காரணம்?
1. பெண்கள் குழந்தைகளின் உடல் பருவமடையும் முன்னரே வளர்ச்சியடைதல் ஆபத்து காரணியாக பார்க்கப்படுகின்றது. இளம் வயதில் பெண் குழந்தைகள் பருவமடைவது உடல் பருமன் அதிகரிப்பு காரணமாகவும் இருக்கலாம்.
2. பெண் குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் கலக்கப்படும் இரசாயன பொருட்கள் அவர்களின் ஹார்மோன்களை துண்டி பருவமடைய வைக்கிறது. "forever chemicals" தாக்கம் கருத்தில் கொள்ளப்படும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
3. உணவிலிருந்து உடலுக்குள் செல்லும் கன உலோகங்கள் மற்றும் காற்று மாசுபாடுகளுடன் சேர்ந்து மாதவிடாயில் தாக்கம் செலுத்துக்கின்றன. இதுவும் குழந்தைகளின் பருவமடைதலில் தாக்கம் செலுத்தலாம்.
4. ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்ட கோழி உணவு மற்றும் இறைச்சியை உண்ணுதல் அத்துடன் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் மற்றும் தானியங்களை உண்ணுதல் இது போன்ற மோசமான உணவு பழக்கங்களால் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைகிறார்கள்.
5. சிறு வயதில் பருவமடையும் குழந்தை மாதவிடாய் பிரச்சினை மற்றும் ஹார்மோன்கள் மாற்றம் காரணம் ஏகப்பட்ட பின் விளைவுகளை சந்திக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |