பெண்களே வழுக்கை மண்டை வராம இருக்கணுமா? முன்கூட்டியே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க!
முடி உதிர்தல் மற்றும் முடி இழப்பு பிரச்சனையை அதிகம் கொண்டிருப்பவர்கள் பெண்கள் தான். குறிப்பாக கர்ப்பம் மற்றும் பிரசவத்துக்கு பின்பு அதிகமாக முடி இழப்பை சந்திக்கிறார்கள். இதை தடுக்க என்ன செய்யலாம். இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
இது நிச்சயம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் வழுக்கை பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருக்க உதவும். பெண்கள் வழுக்கை முன்புற நெற்றியின் மேல் புறத்திலிருந்து தொடங்குகிறது. இது தனிப்பட்ட அடையாளமாக சொல்லப்படுவதால் இதை எப்போதும் கவனிப்பதன் முலம் வழுக்கையை தடுக்க முயற்சிக்கலாம்.
இது பெண்களின் 40 வயதுக்கு பிறகு தொடங்கும் என்றாலும் வெகு அரிதாக சில பெண்கள் முன்கூட்டியே இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். பெண் வழுக்கை அறிகுறிகள் பெண் வழுக்கையானது ஆண்களை போன்று இல்லாவிட்டாலும் முதல் அறிகுறி ஏறத்தாழ ஒத்து இருக்கும்.
பெரும்பாலும் பெண்களின் வழுக்கை என்பது மூன்று நிலைகளை கொண்டிருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். முடி உதிர்தல் என்பது உச்சந்தலையில் தொடங்குகிறது. ஆண் வழுக்கை போலல்லாமல் முன்பகுதியில் முடிகள் சில இருக்கும்.
முதல் அறிகுறியாக முடி பகிர்வைச் சுற்றியுள்ள மேல் பகுதியில் அடர்த்தி குறைந்து மெல்லியதாக மாறும். இது ஆரம்ப நிலைதான் இதை தொடர்ந்து முடி உதிரும் இடம் விரிவடைந்து முடி அடர்த்தி மேலும் மெல்லியதாக மாறும். தீவிரமாகும் போது முடி மெலிந்து உச்சந்தலை பகுதி தெரியும்படி இருக்கும்.
இது தீவிரமான வழுக்கை அறிகுறி என்று சொல்லலாம். பெண்வழுக்கைக்கு காரணங்கள் பெண் வழுக்கை காரணங்களாக மரபணுவும் உண்டு. சில பெண்கள் ஆண் ஹார்மோன்களான டி.ஹெச்.டி கொண்டிருந்தால் அது முடியின் வேர்க்கால்களை சேதப்படுத்தும் மரபணுவாக இருக்கலாம்.
இது முடியின் அடர்த்தியை மெலிதாக ஆக்குகிறது. முடியின் வேர்க்கால்களை குறுக்க செய்கிறது. முடியின் வளர்ச்சியை குறைக்கிறது. முடி உதிர்தலிலிருந்து மீளக்கூடிய தன்மையை மெதுவாக்குகிறது. இதனால் வழுக்கை நிலை உண்டாகிறது. பெண் வழுக்கைக்கு பொதுவான காரணங்கள் மரபு காரணங்கள் தவிர பெண் வழுக்கை ஆண்களை போன்று ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆண்களின் ஆண்ட்ரோஜன் பெண்களின் மயிர்க்கால்களில் அதிக சேதத்தை உண்டாக்குகிறது. இது வழுக்கை அபாயத்தை உண்டாக்குகிறது. பொதுவாக பெண்களிடம் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் ஆண்களின் ஆண்ட்ரோஜன் ஹார்மோனை எதிர்மறையான செயல்களை எதிர்க்கிறது தடுக்க செய்கிறது.
பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தம், ஊட்டச்சத்தின்மை, இன்சோமேனியா என்னும் தூக்கமின்மை, மருந்துகள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஹார்மோன் சமநிலையின்மை எல்லாமே பெண் வழுக்கைக்கு பொதுவான காரணங்கள்.