காரோட டாப்ல காதலியை கயிற்றில் கட்டி இழுத்து சென்ற காதலன்.. வைரலான வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு!
காதலியை காரின் மேல் கயிற்றினால் கட்டி வைத்துக் கொண்டு காதலன் கார் ஓட்டி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கோசென்கோ என்பவர் தனது காதலியுடன் இணைந்து பலவேறு புதுமையான புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால், இவர் போடும் பதிவுகள் அனைத்தும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதால் ஏராளம் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவருக்கு கிட்டதட்ட அவருக்கு 50 லட்சம் பின் தொடர்பவர்கள் (followers) உள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் இவர் தனது காதலியுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை “Trust Test” என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்த வீடியோவில், தனது காதலி இலோனாவை காரின் மேல் கயிற்றினால் கட்டி வைத்துக்கொண்டு ரோட்டில் கார் ஓட்டி சென்று உள்ளார். இருவரது கைகளிலும் விலங்கு மாற்றியுள்ளனர்.
இந்த வீடியோவானது, பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோ அந்நாட்டின் போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்து உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.760 அபராதம் விதித்துள்ளனர். குறிப்பாக, இளம் வயதினருக்கு இந்த செயல் ஒரு தவறான எடுத்துக்காட்டாக இருப்பதாகவும், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.