Tamizha Tamizha: காதலனை 7 ஜென்மத்திற்கு குழந்தையாக கேட்ட காதலி! இறுதியில் காலில் விழுந்த தருணம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் காதலி ஒருவர் தனது காதலனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
கடந்த வாரத்தில் சண்டையை ஆரம்பிப்பது யார்? கணவர் மற்றும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
காலில் விழுந்த பெண்
பெண் ஒருவர், 4 வருடமாக ஒரே கல்லூரியில் ஒன்றாகவே படித்த அவர் காதலனை புறக்கணித்துள்ளார். மேலும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதும், மிகவும் மோசமாகவும் பேசியுள்ளார்.
தனது தாய் தந்தை கூட வேண்டாம்... ஆனால் தனது கஷ்டத்தில் வந்து நின்ற இவன் ஏழு ஜென்மத்திற்கு குழந்தையாக வேண்டும் என்று கேட்டு இறுதியில் காதலன் காலில் வந்து விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இந்த காட்சியை பார்த்த பலரும் உணர்ச்சிப்பூர்வமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சோகமா இருக்கப்ப இத பாத்து கடைசியா ஸாரி கேக்கறப்ப எனக்கு தெரியாம கண்ணுல தாரை தாரையா கண்ணீர்… அவ்வளவு வீக் ஆயிட்டனா ??♥️♥️ pic.twitter.com/tcMkehC4QL
— Mr.Software (@_mike_ross_) April 1, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |