6 சிங்கங்களுடன் கம்பீரமாக நடந்து வந்த பெண்: வாலை பிடித்து செய்த அட்டகாசம்
சமீப காலமாக விநோத மற்றும் வேடிக்கையான காணொளிகள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது இளம்பெண் ஒருவர் சிங்கத்துடன் கம்பீரமாக நடந்து செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக சிங்கத்தை தூரத்தில் இருந்து பார்த்தாலே மக்கள் அச்சப்படுவதுடன், அருகில் செல்வதற்கும் அதிகமாகவே தயங்குவார்கள்.
ஆனால் இந்த வீடியோவில், ஒரு பெண், ஆடு மாடை மேய்த்துக்கொண்டு போவதுபோல, சிங்களுக்கு பின்னால் மிகவும் சாதாரணமாக நடந்து செல்வதைக் காண முடிகின்றது. சிங்கங்களை கட்டுப்படுத்தி அவர் நடந்துசெல்லும் விதம் பார்க்க வேண்டியதொரு அற்புத காட்சியாக உள்ளது.
குறித்த காட்சியில், காட்டில் ஒரு பெண் 6 பெண் சிங்கங்களுடன் சாலையில் செல்வதைக் காண முடிகிறது. பெண் சிங்கங்களும் அந்த பெண்ணுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல், அவர் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து செல்கின்றன.
இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோ safarigallery என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவின் தலைப்பில், "ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து பயத்தை நீக்கும் ஒரு செயலை செய்து பாருங்கள். முயற்சி செய்வீர்களா?" என்று எழுதப்பட்டுள்ளது.
முதலில் சிங்கங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்பட்டதாகவும், ஆனால் இப்போது சில வகைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன என்றும், மீதமுள்ள ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் உள்ள சாசன்-கிர் தேசிய பூங்காவில் காணப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.